ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு

தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு ஆதாரைக் கட்டாயமாக்குவது தொடர்பாக விசாரித்து வந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கு 2018 மார்ச் 31 வரை அவகாசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று கொண்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மக்களை மத்திய அரசு கட்டாயபடுத்த கூடாது. மக்கள் விருப்பத்தின் பேரிலேயே மொபைல், பான், வங்கிகணக்கு, அரசின் நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். ஆதார் எண் இல்லாமல் மக்கள் வங்கி கணக்கு துவக்க அனுமதிக்கலாம். அதேநேரத்தில், ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.