அரசு மலர் தூவி மரியாதை செய்தால் மட்டும் போதாது – வ.உ.சி கொள்ளுபேத்தி வேதனை

சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் 81வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வ.உ.சியின் கொள்ளுபேத்தி செல்வி இல்லத்தில் நினைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அவரது கொள்ளு பேத்தி செல்வி வ.உ.சி.திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நோட்டரிபப்ளிக் வழக்கறிஞர் முருகானந்தம், டெம்பிள் சிட்டி அரிமாசங்கபட்டயதலைவர் முருகேசன, மற்றும் கபிலேஸ்போஸ், வழக்கறிஞர் குத்தாலிங்கம், மாரிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் வ.உ.சி கொள்ளுபேத்தி வ.உ.சி. சுதந்திர போரட்ட வீரர் மட்டுமல்ல, சிறந்த வழக்கறிஞராகவும் பணியாற்றி சட்டத்திற்கு சேவையாற்றியுள்ளார். அவரது பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்;டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, அவருக்கு அரசு மலர்தூவி மரியாதை செய்தால் மட்டும் போததது, பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.