புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளைம் சுனாமி குடியிருப்பில் ரவுடிகள் சிலர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் வெடிகுண்டு தயாரித்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில் ரவுடி ஒருவரின் கை துண்டானது. இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரோவில் அடுத்த பிள்ளைச்சாவடி மீனவர் குடியிருப்பில் வெடிண்டு தயாரித்த புதுவை வாழைக்குளத்தை சேர்ந்த எலி (எ) எலிகார்த்தி (29) கைகள் துண்டானது.