சென்னையில் விவசாய சங்க ஒருங்கிணைப்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துக் கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது,
நான்உழவன் மகன் இல்லை. ஆனால் உழவனின் மருமகன். நான் ஓட்டு சேகரிக்க இங்கு வரவில்லை. நான் தமிழகத்திற்கு சோறு சேகரிக்க வந்துள்ளேன். டெல்லியைச் சேர்ந்த ஒருவர் என்னை பொறுக்கி என்றார். அறிவு, ஞானத்தை நான் எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன். திருடனை நாம் துரத்தும்போது அவன் நம்மை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலைதான் இன்று உள்ளது. எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்தான் என்பதை மறந்து விட்டீர்கள்.
தமிழகமும் மராட்டியமும்தான் இந்தியாவில் அதிகளவில் வரி கட்டும் மாநிலங்களாக உள்ளது. மற்ற மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஹைட்ரோ கார்பனை விட விவசாயம் மிகவும் முக்கியமானது. கிணறு இன்று தற்கொலை செய்யும் இடமாக மாறிவிட்டது. ஒரு ஆற்றையே காணாமல் போக செய்துவிட்டார்கள் அரசு அதிகாரிகள். குளங்களை, ஏரிகளை சரிசெய்ய நான் இணைவேன். நான் சொல்வதை செய்வதற்கு 36 ஆண்டுகளாக 5 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் குழுவாக பிரிந்து விவசாயிகளை சந்தித்து உதவிக்கு வருவார்கள்.” இவ்வாறு பேசினார் கமல்ஹாசன்.