கோவில்பட்டி அருகே போலி ஆயில் நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை சீல்

கோவில்பட்டி அருகேயுள்ள புதூர், வெம்பூர் பகுதியில் கலப்படமான சமையல் எண்ணெய்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்க்கு வந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வெம்பூரில் போலி ஆயில் நிறுவனம் இயக்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா மாநிலத்தை சேர்ந்த அப்துல் சலாம் என்பவர் பிரபல எண்ணெணெய்களை வாங்கி அதில் கலப்படம் செய்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆலைக்கு சீல் வைத்த உணவுத்துறை அலுவலர்கள், அப்துல் சலாமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எண்ணெணெய்களின் தரம் குறித்து அறிய தர ஆய்வு நடத்த அனுப்பியுள்ளனர்.