மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் வழக்கு விசாரணையை நவம்பர் 10 ஆம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, சன் குழுமத்திற்கு பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக அளித்ததில் ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அவர்கள் அனைவரும் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு சிபிஐ பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது, பதில் அளிக்க சிபிஐ அவகாசம் கோரியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நவம்பர் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது. விசாரணையின்போது மாறன் சகோதரர்கள் தவிர மற்ற 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.