நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காசிதர்மம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்து வட்டி கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த இசக்கிமுத்து, சுப்புலட்சுமி தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தபோது எவரும் எதிர்பார்க்க முடியாத நேரத்தில் தீடீரென தீக்குளித்தனர்.

உயிர்க்கு ஆபத்தான நிலையில் 4 பெரும் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்து வட்டி கொடுமைக்கு 4 முறை ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மனம் முடைந்து தீக்குளித்ததாக சொல்லப்படுகிறது