கோவில்பட்டியில் ப்யூட்டி பார்லர் பெண் படுகொலை – மற்றொரு பெண் காயம் – போலீசார் விசாரணை

கோவில்பட்டி ஆழ்வார் தெருவைச் சேர்ந்தவர் முருகராஜ். இவர் வேளாண்மைதுறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அம்பிகா. இவர் கருப்பசாமி கோவில் தெருவில் ப்யூட்டி பார்லர் நடத்தி வருகின்றனர். நேற்று வழக்கம் போல அம்பிகா தனது ப்யூட்டி பார்லருக்கு சென்றவர் நேற்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் சந்தேகமடைந்த அவரது கணவர் முருகராஜ் அம்பிகா அலுவலத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு அம்பிகாவும் அவரது தோழி குருலெட்சுமி என்பவரும் மயக்கமான நிலையில் கிடந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த முருகராஜ் காவல்துறைக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து இருவரையும் பரிசோதனை செய்ததில் அம்பிகா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.ஆனால் குருலெட்சுமி வெறும் மயக்கத்தில் இருந்ததது தெரியவந்தது.அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் விரைந்து வந்து அம்பிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.போலீசார் விசாரணை நடத்தியதில் அம்பிகா கழுத்தில் கிடந்த 7பவுன் நகை காணமால் போனது தெரியவந்துள்ளது. நகைக்காக இந்த கொலை நடைபெற்றதா இல்லை வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.