நடிகர் கமல்ஹாசன் திமுக ஆட்சியில் சிக்குன் குனியாவுக்கு நிலவேம்பு கொடுத்தபோது எங்கே போனார்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலவேம்பு கசாயம் குறித்து தமிழகத்தில் பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டாம் என கூறியிருந்தார். தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நிலவேம்பு கசாயம் பாதுகாப்பானது தான் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், “நிலவேம்பு குறித்த தவறான கருத்துக்களை யாரும் பரப்ப வேண்டாம். திமுக ஆட்சியின்போது, சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது கமல் எங்கே போயிருந்தார்? நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுவதால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிலர்(கமல்) துணை போவதாக தெரிகிறது” என கூறியுள்ளார்.