சென்னை, ஹைதரபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்த நிலையில், பாடல்கள் மட்டும் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கின்றன. புதிரும், திகிலும் கலந்த படமான ஜானியில் சஞ்சிதா ஷெட்டி, பிரஷாந்த் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, ஆனந்த்ராஜ், கலா ராணி, டாக்டர் சுரேஷ், ஆத்மா, சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சி.பி.ஐ அதிகாரியாக நடித்திருக்கும் சாயாஜி ஷிண்டேவின் துப்பறியும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறது படக்குழு.
ஜீவா சங்கரின் உதவியாளர் வெற்றி செல்வம் ஜானி படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கலை இயக்குநர் மிலன் பெர்ணான்டஸ் அமைத்த 17 க்கும் மேற்பட்ட அரங்குகளில் மிகவும் அரிதான ஒளி அமைப்புகளுடன் ஜானி படமாக்கப்பட்டிருப்பது , என்றார் ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வம்.
படத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் தியாகராஜன், இப்படத்தின் நாயகனைப் பற்றிச் சொல்லும் போது, இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்தப் படத்தில் பிரஷாந்த் மட்டுமல்ல நடித்திருக்கும் அனைவருமே இந்தப் படத்தில் அவர்கள் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் என்றார்.
வேறு மொழித்திரைப்படங்களில் இசையமைத்துக் கொண்டிருக்கும் மூன்று இசையமைப்பாளர்களை தமிழில் ஜானி மூலம் அறிமுகப்படுத்துகிறோம் என்றார். பிரமாண்டமான இசைவெளியீட்டு விழா விரைவில் நடத்தப்படும்.