தமிழ்-தெலுங்கு மொழிகளில் நடித்துவரும் நடிகை சமந்தா, தெலுங்கு படங்களில் நடித்தபோது நாகார்ஜுனா மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்தார். நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர்.
இதையடுத்து, இரு குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர். இந்து, கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணத்தை கோவாவில் நடத்துவது என்றும், அதில் இரண்டு குடும்பத்தினர் மட்டும் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. கோவாவில் உள்ள டபிள்யூ தங்கம் விடுதியில் சமந்தா – நாகசைதன்யா திருமணம் நாளை இந்து முறைப்படி நடைபெறுகிறது. இதையடுத்து நாளை மறுநாள் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இதற்காக கடந்த ஒருவாரமாக கோவாவில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருமணத்தையொட்டி, சமந்தா, நாகசைதன்யா இருவரும் 3 நாட்களுக்கு முன்பே கோவா சென்று, திருமண ஏற்பாடுகளை நேரில் கண்காணித்து வருகிறார்கள். ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமாக நாளை நடைபெறும் இந்த திருமணத்தில் நாக சைதன்யாவின் தாயார், தந்தை நாகார்ஜூனாவின் உறவினர்கள் ராணா, வெங்கடேஷ், சுரேஷ்பாபு, நாக சைதன்யாவின் தாத்தா ராமா நாயுடுவின் மனைவி, நாகார்ஜூனாவின் மனைவி அமலா, இவர்களுடைய மகன் அகில் மற்றும் சமந்தா குடும்பத்தினர் உள்ளிட்ட உறவினர்கள் 183 பேர் மட்டுமே பங்கேற்கிறார்கள்.