தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரி லால் ப்ரோஹித் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலர் மற்றும் காவல் துறை டிஜிபி ஆகியோர் நேரில் சென்று அவரை வரவேற்றனர். நாளை நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிய ஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.