மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில், “வடதமிழகத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை பெய்யும். அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் தர்மபுரியில் 8 செமீ மழையும், ஒக்கேனக்கல் பகுதியில் 7 செமீ மழையும் பெய்துள்ளது” என தெரிவித்தார்.