தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று சிறப்பு காவல்படை குவிக்கப்பட்டுள்ளது. போலீசாரை உஷார் நிலையில் இருக்குமாறு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்து விட்டதாக பல்வேறு வதந்திகள் கிளம்பி வருகின்றன. இதையடுத்து, கருணாநிதியின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, அவர் நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.