சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட 32 விருதுகளை பெற்ற “குயின்” இந்திப் படத்தினை ரீமேக் அல்ல மறு உருவாக்கம் தான் செய்கிறார் ரமேஷ்அரவிந்த், இந்த படத்தின் பெயர் பாரிஸ் பாரிஸ்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் அரவிந்த் இதனை தெரிவித்தார். கதை பற்றி கூறிய அவர், விருதுநகரில் வாழும் தன்னம்பிக்கை குறைவான ஒரு இளம்பெண்ணின் திருமணத்தை, அவளது வருங்கால கணவனே தடுத்து நிறுத்தி விடுகிறான். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண், தனியாகவே தேனிலவுக்கு செல்வது என முடிவெடுத்து, தனது பயணத்தைத் துவங்குகிறாள். அப்பயணத்தில் அவள் சந்தித்த புதிய மனிதர்களின் மூலம், அவளுக்கு ஏற்பட்ட, புதுப்புது அனுபவங்களில் தனது சுய அடையாளத்தைக் கண்டுகொள்கிறாள். என்பதுதான் படத்தின் கதை.
தமிழில் பாரிஸ் படத்தில் ஒரு விருது நகர் பெண் உலகைப் பார்க்கக் கிளம்புவது போல வைத்துள்ளேன். கன்னடத்தில் ஒரு கடலோர கிராமப்பெண் என்று சொல்கிறேன். குயின் படத்தை நாங்கள் அப்படியே ரீமேக் செய்யவில்லை. கதையை மற்றும் எடுத்துக்கொண்டு நிறைய மறு உருவாக்கம் செய்கிறோம். விருதுநகர், பாரிஸ், பார்சிலோனா, ஆம்ஸ்டர்டாம், லண்டன் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது” என்றார் ரமேஷ் அரவிந்த்.
ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடித்து 12 கோடி பட்ஜெட்டில் தயாராகி, வசூலில் 97 கோடிகளைக் குவித்துச் சாதனை படைத்தபடம், வசனங்கள் மற்றும் பாடல்களை தமிழச்சி தங்கபாண்டியன் எழுதுகிறார். பிரபல மலையாள தயாரிப்பாளர் KP குமாரனின் மகன், மனு குமாரன் மற்றும் மனோஜ் கேசவன் என்பவரும் இணைந்து தயாரிக்க, காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார், நாயகன் பல விளம்பரப் படங்களில் நடித்த சஷி வருண்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில், ஒரேநேரத்தில் உருவாக இருக்கும் இந்தப் படம், ஒரே சமயத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.