கோவில்பட்டியில் உள்ள பொது நலமருத்துவமனையில் முதல்வர் விரிவான காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டதற்காக பாராட்டு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் .சி.விஜயபாஸ்கர் பேசுகையில் முதல்வர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் ரூ.1525 கோடி ரூபாய் செலவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பயன்பெற்றுள்ளதாகவும், இந்திய அளவில் இதயம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.
இது குறித்து மன்கீபாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சையில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தினை பின்பற்ற வேண்டும் என்று கூறி பாராட்டியுள்ளார். பிரதமர் மோடி பாராட்டும் அளவிற்கு தமிழக சுகாதாரத்துறை வெகுசிறப்பாக நடைபெற்று வருவதாகவும், சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளும், 2வது கட்ட நகரங்களும், மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவனைகளில் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.