எனது தலைமையிலான அரசு கல்வித்துறையில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தியுள்ளது – முதல்வர்

சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு இன்று பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைப்பெற்றது. விழாவில் முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர்கள் 2,315 பேருக்கும், சிறப்பு ஆசிரியர்கள் 58 பேருக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வழங்கினர்.

தொடர்ந்து பேசிய முதல்வர், “எனது தலைமையிலான அரசு கல்வித்துறையில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாடத்திட்டங்கள் சிறந்த முறையில் இந்திய அளவில் தரம் வாய்ந்ததாக மாற்றம் கொண்டு வரப்படும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கலைத் திருவிழா அறிமுகப்படுத்தப்படும். ஆண்டு தோறும் 100 மாணவர்கள் கல்விசுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர். மேலும் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்” என அறிவித்துள்ளார்.