கமல், கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடிகர் கமல் ஹாசனை இன்று சந்தித்தார். பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், “ஊழலுக்கு எதிராக போராடும் அனைவரும் எனக்கு உறவினர்களே. இதுகுறித்து அவர் என்னை பார்க்க வந்தது எனக்கு கிடைத்த மரியாதை. அவர் எதற்காக என்னை பார்க்க வந்தார் என்பது ஒரு புறம். ஆனால் நான் இந்த சந்திப்பில் நிறைய கற்றுக் கொண்டேன். அரசியல் பற்றி இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறேன்,” என கமல் கூறினார். 

பிறகு கெஜ்ரிவால் பேசியபோது, “கமலுடைய பெரிய ரசிகன் நான். நாடு முழுவதும் ஊழலும், மதவாதமும் தலை விரித்தாடி வருகிறது. இந்த நேரத்தில் ஒரே எண்ணம் கொண்டவர்கள் ஒன்று கூடி முன்னேற்றத்திற்காக நிற்கவேண்டும். இவற்றிற்கு எதிராக பலரும் பேச பயப்படுவார்கள். ஆனால், கமல் தைரியமாக வெளியே வந்து பேசியிருக்கிறார். கமல் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நாட்டு நடப்புகளை பற்றி அவருடன் வெகுநேரம் பேசினேன். கமலுக்கும், அவரது விருந்தோம்பலுக்கும் நன்றி,” என்றார்.