கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உண்டாகும் கழிவுகளை ஈரக்கழிவு, உலர்கழிவு என தனித்தனியாகப் பிரித்து வழங்க நகராட்சி பணியாளர்களால் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சியினை நகராட்சி ஆணையாளர் அச்சையா தொடங்கி வைத்தார். ஈரக்கழிவுகளான காய்கறி கழிவுகள், மாமிசம், உணவு கழிவுகள், மக்கும் கழிவுகளை பச்சை நிறக் கூடையில் பிரித்து வைத்து புதன் கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் வழங்க வேண்டும்.
பிளாஸ்டிக் கேரிபைகள், கப்புகள், எண்ணெய், மசாலா கவர்கள், உலோகம், தோல் பொருட்கள், கண்ணாடி, ரப்பர் பொருட்கள், பழைய துணிகள் மற்றும் மறுசுழற்சிக்கு உகந்தவைகள் நீல நிறக் கூடையிலும் பிரித்து புதன் கிழமை மட்டும் வழங்க வேண்டும். 02.10.2017 முதல் இந்நகராட்சி பகுதிகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் ஸ்டான்லி குமார், சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், முருகன், சுரேஷ், வள்ளிராஜ், காஜா நஜ்முதீன், ஆக்டிவ் மைண்ட்ஸ் தேன்ராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தவமணி கலந்து கொண்டார்கள்.