கோவில்பட்டியில் அங்கன்வாடி பணியாளர் நியமனத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக இருந்த அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது.அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இதற்கிடையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பகத்சிங் மன்றத்தினர் அதன் மாவட்ட தலைவர் உத்தண்டுராமன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதில் விதைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படமால், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், எனவே அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தினை ரத்து செய்து விட்டு தகுதி உள்ள நபர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதனைவலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.