கோவில்பட்டியில் ஆற்றல் சிக்கன மேம்பாடு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆற்றல் சிக்கன மேம்பாடும், ஆற்றல் பாதுகாப்பும் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட உதவியாட்சியர் சரவணன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் ஸ்வர்ணலதா வரவேற்புரை வழங்கினார். ஸ்டேட் பாங்க்; ஆப் இந்தியா மேனேஜர் சங்கரசுப்பிரமணியன் மற்றும் கோம்பிக் கூட்டுறவு சங்க தலைவர் பரமசிவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஜே.சி.ஐ. சர்வதேச பயிற்சியாளர் டென்சிங் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதாயம் தரும் ஆற்றல் சேமிப்பு பற்றி விரிவாக பேசினார். மாவட்ட பொது தொழில் மேலாளர் இராஜராஜன் ஆற்றல் சேமிப்பிற்கு தமிழக அரசின் மானியங்கள் பற்றி பேசினார். கே.எல்.என்.  இன்ஜி.,கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் வெங்கடநாராயணன் ஆற்றல் சேமிப்பு பற்றி விளக்கவுரை வழங்கினார்.இதில் சிறு,குறு தொழிற்சாலைகளில் மின்சக்தி, எரிசக்தி ஆற்றல்களை சிக்கனமாக பயன்படுத்துவது,

அதன்மேம்பாடு குறித்தும், ஆற்றல் குறித்து தணிக்கை செய்வது, அதற்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்கள் குறித்து இந்த விழிப்புணர்வ கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அடுத்த தலைமுறையினரும் ஆற்றல் சிக்கன மேம்பாடு குறித்து அறிந்து கொள்ளவும், அதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாவட்ட தொழில் உதவிப்பொறியாளர் முருகன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய மேலாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.