கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவு சார்பில் ஜீ.எஸ்.டி குறித்த விளக்க மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், பட்டயக்கணக்கர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.இதில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் சிவந்தி.நாரயணன், பா.ஜ.க. மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் பாலு, செயலாளர் முருகன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்குமார், தொழிற்பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகேசன் மற்றும், திரளான வணிகர்கள், ஏற்றுமதியளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் ஆளுநர் ஒருவர் தான் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார்.அதிமுகவில் உள்ள பல அணிகள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பொறுப்பற்ற முறையில் தங்களது ஆதாயத்திற்காக செயல்பட்டு வருகின்றனர். அரசியல் சாசனம் சட்டசிக்கல் அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.
அரசியல் சாசனப்படி ஆளுநர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தற்போதையை அதிமுக ஆட்சி தொடர வேண்டும், சபாநாயகருக்கு கேட்ட விளக்கத்தினை 18எம்.எல்.ஏ.க்கள் தரவில்லை என்பதால் அவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தினகரன் தரப்பு நீதிமன்றத்தினை அணுகலாம்.அதன் முடிவினை பொறுத்து இருந்து பார்க்கலாம். நீட் தேர்வு எதிர்ப்பு தமிழகத்தில் நீர்த்துபோய்விட்டது.திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை மாணவர்கள் நம்ப தயாராக இல்லை,நீட் தேர்வு மூலமாக சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.நவயோதய பள்ளிகள் தமிழர்களுக்கு எதிரான பள்ளி இல்லை,
அருகில் உள்ள பாண்டிச்சேரியில் நவயோதய பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கபடும் போது, ஹிந்திக்காக நவயோதய பள்ளிகளை எதிர்ப்பது முறைகிடையாது, தமிழகத்தில் நவயோதய பள்ளிகளை திறக்க வலியுறுத்தி வரும் 21ந்தேதி தமிழகம் முழவதும் பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.