அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு முன்ஜாமீன்

நாமக்கல் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் என்பவர், தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அமைச்சர் பழனியப்பன் பெயர் அடிபட்டது. சுப்பிரமணியன் தற்கொலை செய்யும்முன் எழுதி வைத்த ஒரு கடிதத்தில் அமைச்சரின் பெயர் இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.  அவரை ஏற்கனவே ஒருமுறை விசாரித்த சிபிசிஐடி போலீசார், மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். அவர் ஆஜராகாததால் அவரை போலீசார் தேடி வந்தனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குடகு சொகுசு விடுதியில் தங்கியிருந்த பழனியப்பன், திடீரென தலைமறைவானார். இந்நிலையில், அவருக்கு முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பழனியப்பனுக்கும், தென்னரசுக்கும் முன்ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தனர். மேலும், “தற்கொலை செய்தவர் எழுதி வைத்த கடிதம் இருக்கும்போது, இந்த வழக்கு ஏன் சிபிசிஐடி-யிடம் சென்றது. சிபிசிஐடி-க்கு வேறு வேலை இல்லையா?,” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.