அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

பொள்ளாச்சி அருகே ஆழியாரில் உள்ள குரங்கு அருவி மற்றும் திருப்பூர் உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டது.  மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை அருவி மற்றும் தென்காசி அருகே குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2வது நாளாக குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.