எம் எஸ் மூர்த்தி இயக்கத்தில், ரக்ஷிதா மகாலட்சுமி, ஸ்வேதா, சபரி, ரோகிந்த், பவன் கிருஷ்ணா, சிங்கம் புலி, முல்லை, கோதண்டம், கே ஆர் விஜயா, எம்.எஸ் மூர்த்தி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் 99/66 (தொன்னூற்று ஒன்பது/அறுபத்தி ஆறு)
கணவன் மனைவியாக இருக்கும் ரக்சிதா மகாலட்சுமியும் சபரியும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 66 என்னுள்ள வீட்டை வாங்கி குடி ஏறுகிறார்கள்.
அதே அடுக்குமாடி குடியிருப்பில் 99 ஆவது என்னுள்ள வீட்டில் குடியிருக்கும் ஸ்வேதாவுக்கு ரக்ஷிதாவுடன் நட்பு ஏற்படுகிறது.
அவர்கள் குடியிருக்கும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் தலைவராக இருக்கும் எம் எஸ் மூர்த்தி இரவு நேரங்களில் வெளியே செல்ல முயற்சி செய்கிறார். அந்த நேரத்தில் ஆந்தை ஒன்று அவரை தடுத்து நிறுத்துகிறது இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது ஒரு புறம் இருக்க தச்சிதாவை அவரது கணவர் பலமுறை கொலை செய்ய திட்டமிடுகிறார் ஆனால் அதிலிருந்து ரக்ஷிதா தொடர்ந்து தப்பிக்கிறார்.
ஒரு நாள் இரவு ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்வதாக நினைக்கும் ரக்ஷிதா அங்கே இருப்பவர்களிடம் தகவலை சொல்கிறார்.
ஆனால் அங்கிருப்பவர்களோ அந்த பிளாட்டில் யாருமில்லை ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் சொல்கிறார்கள்.
அப்படியானால் ஸ்வேதாவிற்கும் ரக்ஷ்தாவிற்கும் நட்பு ஏற்பட்டது எப்படி? ரக்ஷிதாவை அவரின் கணவர் கொலை செய்ய முயற்சிப்பது ஏன்? என்பதே 99/66 படத்துடன் மீதீக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : எம்எஸ் மூர்த்தி
தயாரிப்பு : எம் எஸ் மூர்த்தி
இசை : எம் எஸ் மூர்த்தி
ஒளிப்பதிவு : ராஜா
படத்தொகுப்பு : மீனாட்சி சுந்தரம்
கலை இயக்குனர் : ஜெயமுருகன்
மக்கள் தொடர்பு : மணவை புவன்

