விஜய் சேதுபதியின் ’96’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது.
விழாவில் திரிஷா பேசும் போது, “இந்தப் படம் ஒரு ஹீரோயினுக்காகவே எழுதப்பட்ட படம். விஜய் சேதுபதி கூட போட்டி போட்டு நடிக்கவில்லை. அவர் கேஸுவல் கேரக்டராக பண்ணியிருக்கிறார் என விஜய் சேதுபதியைப் பாராட்டி பேசியவர் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையப் பாராட்டிப் பேசினார்.
இந்த விழாவில் விஜய் சேதுபதி பேசிய போது,” இந்தப் படம் இயக்குநர் பிரேம் மூலம் தொடங்கப்பட்டது. செக்கச் சிவந்த வானம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்க என சொல்லியிருந்தேன். அதுபோல இந்த 96 படத்துக்கு என்னால சொல்ல முடியவில்லை. ஏனென்றால் இந்த படத்தின் டிரெய்லர், பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு அப்படியாகிவிட்டது. இதுவே என்னை பயமுறுத்திவிட்டது. இந்தப் படத்தில் அனைவரும் நிம்மதியாக வேலை பார்த்துள்ளனர்” என படம் குறித்த அனுபவத்தைப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்ட “உங்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்களாமே?” என்ற கேள்விக்கு “கணக்குகளை ஆய்வு செய்யத்தான் வந்தார்களே தவிர, ரெய்டுக்காக அல்ல” என்றார் .
“இதுபோன்ற செய்திளால் உங்கள் பெயர் கெட்டுவிடாதா?” என்ற கேள்விக்கு, ”அப்படி எதுவும் ஆகாது. தவறான செய்தி பரப்பப்படுவது ஒருவிதத்தில் எனக்கு இலவச பப்ளிசிடியாகத்தான் அமையும். இப்போதெல்லாம் தவறாக பேசிவிட்டு நான் அப்படி பேசவில்லை, என்னுடைய அட்மின் தான் பேசினார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி மாற்றி மாற்றிப் பேசி பப்ளிசிடி தேடுவது டிரெண்டாகவே ஆகிவிட்டது. அதேபோல் நானும் சொல்கிறேன். ரெய்டு நடந்தது என் வீட்டில் அல்ல. என் வீடு போலவே செட்டிங் போட்டு அதில் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்’’ என நகைச்சுவையாக பேசினார்.