மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் பேனரில் விவேக் ரங்காச்சாரி தயாரிப்பில் ஸ்ரீபதி இயக்கத்தில், மதுர் மிட்டல், மஹிமா நம்பியார், நாசர், கிங் ரத்னம், நரேன், சரத் லோஹிதாஷ்வா, வேல ராமமூர்த்தி, வடிவுக்கரசி, ஹரி, ஜானகி, சரத் லோகி, யோக் ஜேபி, ரித்விகா, ரித்விக், பிருத்வி
ஆகிய நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் 800.
முத்தையா முரளிதரனின் கதையை முத்தையா முரளிதரனின் சொந்த ஊரான கண்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் நாசர் சொல்ல படம் ஆரம்பமாகிறது. நாசர் முரளியின் வாழ்க்கையையும் அதைப் போராட்டத்தை விவரிக்கிறார். முத்தையாவின் குழந்தைப் பருவத்தில் ஆரம்பித்து சிங்களம் & தமிழ் கலவரங்களுக்கு மத்தியில் அவரது பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் மற்றும் கிரிக்கெட் மீதான அவரது முயற்சி ஆர்வம் ஆகியவை சொல்லப்படுகிறது. முத்தையா தன்னுடைய 19வது வயதில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கிறார்.
அணியில் நுழைந்து, தனது ஆஃப் ஸ்பின் மூலம் வெற்றி பெற்ற பின்னர், ஆஸ்திரேலிய நடுவர்களால் சக்கிங்
என்று குற்றம் சாட்டப்படுகிறார்.
அவரது ‘சர்ச்சைக்குரிய’ பந்துவீச்சு அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை தடம் புரள வைக்கிறது. தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முத்தையா, இலங்கை அணி & அவரது ரசிகர்களுக்காக தன்னை நிரூபிக்க வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார்.
முத்தையா எப்படி எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார்? அதையெல்லாம் எதிர்கொண்டு உலகின் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்து எப்படி வீரராக வெளிவருகிறார் என்பது தான் 800 படத்தின் கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் பேனரில் விவேக் ரங்காச்சாரி
இயக்கம் : ஸ்ரீபதி
ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்
இசை : ஜிப்ரான்
மக்கள் தொடர்பு : டிஒன் ரேகா, சுரேஷ்சந்திரா