இயற்கையான எலுமிச்சை பழச்சாறு கொண்ட புத்துணர்வு ஊட்டும் குளிர்பானமாக 7-அப் திகழ்ந்து வருகிறது. இந்த பானத்தின் புதிய பிரசாரத்தை முன்னணி நடிகை ஆதா ஷர்மாவும், பிடோ-டிடோ எனப்படும் 7-அப்பின் கார்ட்டூன் பசுமை நாயகனும் இணைந்து சென்னையில் முன்வைத்தனர். இதற்கான நிகழ்ச்சி எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்றது.
குளிர்வித்து இருப்போம் என்ற தத்துவத்தை அவர் 7-அப் குளிர்பானத்துக்கு பொருத்திஅதற்கான பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது பார்வையாளர்களிடம் பேசிய அவர், மிகவும் அழுத்தமான சூழ்நிலைகளில் ஒருவர் எப்படி எதனை எதிர்கொண்டு எளிதாகக் கையாள வேண்டும் என்பதை விளக்கினார். அழுத்தமான சூழலில் இருந்து விலகி சிறிது ஓய்வெடுத்து பிறகு காரியங்களை செய்யத் தொடங்கினால் பிரச்சனையில்லாமல் இருக்கலாம் என்று பேசினார்.
7-அப் குளிர்பானத்தின் ஐகானாக பிடோ-டிடோ எனப்படும் கார்ட்டூன் கதாபாத்திரம் திகழ்கிறது. இது தனது சுருண்ட தலைமுடி போன்றவற்றின் மூலமாக வாடிக்கையாளர்களின் மனதில் நன்கு பதிந்துள்ளது. வாழ்வின் எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் அதனை அமைதியாகவும், நகைச்சுவையாக எடுத்துக் கொண்டால் எந்தத் துன்பமும் நம்மை நெருங்காது என்ற கருத்தை முன்வைக்கிறது.
நடிகை ஆதா மற்றும் 7-அப், மிரண்டா ஆகியவற்றின் இயக்குநர் நோபெல் திங்கரா ஆகியோர் இணைந்து 7-அப் சில்கேஷன் என்பதைத் தொடங்கி வைத்தனர். இதன்மூலமாக, 4 வகையான சாகசங்கள் ஒருசில விநாடிகளில் வாடிக்கையாளர்களுக்கு காட்டப்படும்.
ஒவ்வொரு செயலிலும் அமைதியாக, பொறுமையாக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நடிகை ஆதா ஷர்மா தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களின் மூலமாக பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார். அவர் பேசும் போது, 7- அப் குளிர்பானத்தின் குளிர்வித்து இருப்போம் என்ற பிரசாரத்தில் பங்கேற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது கலாசார சூழ்நிலைகள், முற்றுப்பெறாத பணிகள், சமூகத்திடம் உள்ள நமக்குரிய பொறுப்புகள் என பலவும் நம்மைச் சுற்றுச்சூழ்ந்துள்ளன.
அவை அனைத்தும் இணைந்து நமக்கு மிகப்பெரிய அழுத்தங்களை உருவாக்குகின்றன. ஆனால், 7-அப் குளிர்பானத்தின் குளிர்வித்து இருப்போம் என்ற பிரசாரமானது நமக்குரிய அழுத்தங்கள் பெரும் பொருட்டாக நமக்குத் தெரியாமல் அவற்றை எளிதாக கடந்து போக உதவி செய்யும். நாம் அமைதியாக, பொறுமையாக இருந்து ஒரு காரியத்தைச் செய்யும் போது நமக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. நமக்குரிய இயல்பான தன்மையை யாரும் எளிதில் எடுத்துச் சென்று விட முடியாது.
இதுகுறித்து, பெப்ஸிகோ இந்தியா நிறுவனத்தின் ப்ளேவலர்ஸ் (7அப் மற்றும் மிரண்டா) பிரிவின் இயக்குநர் நோபல் திங்கரா கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாக சென்னை நகரத்தில் 7-அப் குளிர்பானத்துக்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்தது. இங்குள்ள வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் திரும்ப வந்துள்ளோம். 7-அப் தனது வாடிக்கையாளர்களை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திட உதவுகிறது. நடிகை ஆதா ஷர்மாவும், பிடோ-டிடோ கார்ட்டூனும் இணைந்து 7-அப் சில்கேஷனை சென்னை நகரில் அறிமுகப்படுத்தி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
எனவே, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாகவும், வாழ்வில் எந்த நெருக்குதலும் இல்லாமலும் வாழ எங்களது பிரசாரம் பெரிதும் உதவிடும் என்றார்.