ஹாரூன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கிராஜா ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் “7ஜி”
ஸ்முருதி வெங்கட்டும், ரோஷன் பஷீரும் கணவன் மனைவி இருவரும் தன் மகனுடன் தங்களுடைய நீண்ட நாள் கனவான சொந்த வீடு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார்கள்.
தன் கனவு நிறைவான சந்தோஷத்தில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
இவர்கள் புது வீடு வாங்கியதற்காக ரோஷன் பஷீர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நண்பர்களை அழைத்து விருந்து வைக்கிறார்.
அப்போது, ரோஷன் பஷீர் உடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சினேகா குப்தா அவரை நெருங்குவதற்காக சில பில்லி சூனியம் செய்து அந்த பொம்மையை அவர்கள் வீட்டில் ஒரு அலமாரியில் வைத்து விடுகிறார்.
இந்த சமயத்தில் ரோஷன் பஷீர் அலுவலக வேலை காரணமாக வெளியூர் செல்ல, வீட்டில் மகனுடன் தனியாக இருக்கும் ஸ்முருதி வெங்கட் பல்வேறு அமானுஷ்ய பிரச்சனைகளை சந்திக்கிறார்.
அங்கு அந்த வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எல்லாம் சினேகா குப்தா செய்த பில்லி சூனியம் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்க, ஆனால் அங்கு வேறு ஒரு ஆத்மா இருந்து அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த ஆத்மா யார்? எதற்காக அவர்களை மிரட்டுகிறது?
அந்த ஆத்மா அந்த வீட்டில் இருக்க காரணம் என்ன? என்பதே 7/G படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
பேனர்: கனவு இல்லம்
தயாரிப்பாளர்: ஹாரூன்
ஹாரூன் இயக்கி தயாரித்துள்ளார்.
ஒளிப்பதிவு: கண்ணா
ஆசிரியர் : பிஜு.வி.டான் போஸ்கோ
இசை: சித்தார்த் விபின்
ஸ்டண்ட் : தீ கார்த்திக்
மேக்கப்: பி மாரியப்பன்
சிகை அலங்காரம் செய்பவர்: ரவீன்
ஸ்டில்ஸ்: மிலன் சீனு
பாடல் வரிகள்: மோகன் ராஜன், குட்டி ரேவதி
பாடியவர்கள்: சைந்தவி, பிரியங்கா, ரீட்டா தியாகராஜன், லோகேஷ்
நடனம் : ரிச்சி ரிச்சர்ட்சன்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)
தயாரிப்பு நிர்வாகி : கே.எஸ்.கே.செல்வா
தயாரிப்பு மேலாளர் : கே எச் ஜெகதீஷ்
சவுண்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோஸ்: சதீஷ் குமார்
ஒலிக்கலவை : ஹரிஷ்
DI : ஃபயர் ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ்
பப்ளிசிட்டி டிசைனர் : ரஜின் கிருஷ்ணன் எம்
இசை லேபிள் : எம்ஆர்டி இசை