கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தூய்மையே சேவை இயக்க திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ ஆகியோர் கலந்து கொண்டு தூய்மையே சேவை இயக்க திட்டத்தினை தொடங்கி வைத்தனர். மேலும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மருத்துவமனையை ஆய்வு செய்தார் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதன்பின்னர் மருத்துவ கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தூய்மையே சேவை இயக்க திட்டத்தினை தொடங்கி வைத்த நாள் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இத்திட்டம் வெகுசிறப்பாக தொடங்கப்பட்ட நடைபெற்று வருவதாகவும், ஒரு காலத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் வருவதற்கு முகம் சுழித்த நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் தூய்மையாக காட்சியளிப்பது மட்டுமின்றி பல்வேறு நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தாய்,சேய் குழந்தை இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் குறைவு, பலவிதமான அறுவைசிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் தரமாக செய்யப்படுவதால் மக்களின் பார்வை அரசு மருத்துவமனையின் மீது விழத் தொடங்கியுள்ளது. சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்களுக்க விருது வழங்கப்படுவது போல தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தர்.
அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசுகையில் இந்தியாவின் மருத்துவ தலைநகரம் சென்னை தான், உலக தரம் வாய்;ந்த சூப்பர் மல்டி ஸ்பொலிட்டி மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான், தூய்மையே சேவை திட்டத்தில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. மருத்துவதுறையூடன் , ஊராகத்துறையூம் சேர்ந்த இத்திட்டத்தினை தமிழகம் முழுவதும் சிறப்பாக செய்து வருகின்றனர்.தமிழக அரசு மருத்துவதுறையில் புதிய சகாப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
விழா முடிந்த பின்பு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற சமீபத்தில் 1113 மருத்துவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பணிநியமன ஆணை வழங்கினார். அவர்கள் அனைவரும் கிராமப்புறங்களில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு சிகிச்சையில் பணியாற்றி விரைவில் 744 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்க உள்ளதாகவும்,200 படுக்கை கொண்ட 42 அரசு மருத்துவனைகளில் அவுட் சோசிங்க மூலமாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 32 மருத்துவனைகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.