65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த இசையமைப்பாளராக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ஏ.ஆர்.ரகுமான் வென்றுள்ளார். காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், மாம் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் பெறுகிறார்.
அதேபோல் சிறந்த பாடகியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் காற்று வெளியிடை படத்தில் ஒரு பாடலை பாடிய சாஷா திரிபாதிக்கு வழங்கப்படுகிறது.