நீட் தேர்வினை ரத்து செய்ய கோரி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆதிதமிழர் கட்சியினர் 6 பேர் கைது

சமூக நீதியை சீர்குலைக்கும் வகையில் உள்ள நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், தமிழக மாணவர்களுக்கு நீர் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று ஏமாற்றிய தமிழக அரசினை கண்டித்தும், நீட் தேர்வினை அடிப்படையாக கொண்டு நடைபெறும் கலந்தாய்வினை ரத்து செய்ய வேண்டும், மற்ற மாநிலத்தினை சேர்ந்தவர்கள் போலியாக முகவரி கொடுத்து சேருவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் ஆதிதமிழர்கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே நிலையத்திற்குள்ள நுழைய முயன்ற போது வாயிலில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் ரெயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த 6பேரையும் கைது செய்தனர்