6 அத்தியாம் – விமர்சனம்

அஜயன் பாலா, சுரேஷ் இஏவி, லோகேஷ் ராஜேந்திரன், ஸ்ரீதர் வெங்கடேசன்,  கேபிள் பி.சங்கர், சங்கர் தியாகராஜன்,  என்ற ஆறு இயக்குனர்கள், ஆசி மீடியா ஹட் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரிப்பில்  இயக்கிய ஆறு குறும்படங்களின் தொகுப்பு இந்த 6 அத்தியாயம் படம்.

முதல் குறும் படத்தின் பெயர் சூப்பர் ஹீரோ. தன்னிடம் அபூர்வ சக்தி இருக்கிறது என்று சொல்லும் ஹீரோவை மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றனர் அவரது பெற்றோர். டாக்டரிடம் தன்னுடைய சூப்பர் பவரை காட்டி நம்ப வைக்க முயற்சி செய்கிறார். இதில் வெற்றி பெற்றாரா ஹீரோ என்பதே முதல் கதை.

இரண்டாவது குறும்படம் இனி தொடரும். பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் இளைஞனை பழிவாங்க நினைக்கும் குழந்தை ஆவிக்கு உதவும் இன்னொரு பெண் ஆவி. இதில் இளைஞனை ஆவிகள் பழிவாங்கியதா? என்பதே மீதிக்கதை.

மூன்றாவது குறும்படம் மிசை. நண்பர்கள் மூன்று பேரில் பசங்க கிஷோர் காதலிப்பதை பொறுத்துக் கொள்ளாத இரண்டு நண்பர்களும் என்ன செய்தார்கள்? இதை கிஷோர் அறிந்து என்ன முடிவு எடுத்தார்? என்பதைச் சொல்லும் கதை.

நான்காவது குறும்படம் அனாமிகா. தன் மாமா வீட்டில் தங்க வரும் சஞ்சீவை அங்கே பேய் நடமாடுவதாக பயமுறுத்தி விட்டு உதவிக்கு அருகில் உள்ள பெரியவரை அறிமுகம் செய்து தனியாக வீட்டில் விட்டு விட்டு வெளியே சென்று விடுகிறார் மாமா. அதன் பின் சஞ்சீவ்ற்கு ஆமானுஷ்யமாக பல சம்பவங்கள் நடப்பதை உணர்கிறார். இதனால் மயங்கி விழும் சஞ்சீவ் நிலை என்ன என்பதே மீதிக்கதை.

ஐந்தாவது குறும்படம் சூப் பாய் சுப்ரமணி. கஷ்டப்பட்டு காதலிக்க தொடங்கினாலும், இஷ்டப்பட்டு பெற்றோர்கள் பெண் தேடினாலும் கடைசியில் பேயால் திருமணம் தடைப்பட்டு போக இதற்கு காரணம் என்ன என்று நம்பூதிரி சாமியாரை நாடுகிறார் விஷ்ணு. இதற்கு காரணம் என்ன என்று நம்பூதிரி சாமியார் கண்டுபிடித்து பரிகாரம் செய்தாரா? காரணம் என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.

ஆறாவது கதை சித்தரம் கொல்லுதடி. ஒவியக் கலைஞன் தான் படித்த புத்தகத்தை உள்வாங்கி ஒவியம் வரைவதில் கில்லாடி. அதன்படி அழகான சங்க கால பெண்ணை இந்தக் கால மாற்றங்களோடு வரைந்து கொடுத்தால் பணம் தருவதாக வெளிநாட்டுப் பெண் கேட்பதாக நண்பர் கூறுகிறார். இதனால் பல இடங்களில் அலைந்து திரிந்து புத்தகங்களை வாங்க அதில் ஒன்று பாதி கிழிந்த கோகிலா என்ற நாவல் ஒவியருக்கு தற்செயலாக கிடைக்கிறது. அதை படித்து ஒவியத்தை வரையத் தொடங்குகிறார். இறுதியில் கண் பற்றிய வர்ணனை இல்லாமல் ஒவியம் ழுழுமை பெறாமல் இருக்கிறது. அந்த கிழிந்து மீதி பாதி புத்தகத்தை தேட தன் நண்பனிடம் சொல்லுகிறார். ஒவியருக்கு மீதி புத்தகம் கிடைத்து ஒவியத்தை வரைந்து முடித்தாரா? அதன் பின் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

ஆறு குறும்படங்களின் கதையை முதலில் சொல்லி விட்டு பின்னர் அனைத்து குறும்படங்களின் க்ளைமேக்சையும் இறுதியில் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆறு படத்திலும் ஆமானுஷ்ய சக்தி தொடர்புடையதாக இருக்குப்படி கதைகளை அமைத்திருக்கிறார்கள்.

 இத்திரைப்படம் வெற்றி பெற vtv24x7.com ன் வாழ்த்துக்கள்