சல்மான் கான், கேட்ரினா கைஃப் நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே, உலகின் 5 வெவ்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட, ஒரு அதிரடி திரைப்படம்.
படத்தின் முன்னனி கதாபாத்திரங்களான டைகரும் சோயாவும் 5 நாடுகளுக்கு சென்று, அங்கு இருக்கும் சமூக விரோதிகளை எதிர்த்து சண்டையிடும் உயிருக்கு ஆபத்தான வேலையை செய்யும் உளவாளியாக நடித்துள்ளனர். இரண்டு அதிபுத்திசாலி உளவாளிகளின் ஆபத்தான பயணத்தை, படத்தின் இயக்குனர் மிக பிரம்மாண்டமான முறையில் ஆஸ்திரேலியா, கிரீஸ், மொராக்கோ, அபுதாபி மற்றும் இந்தியாவில் நடக்கின்ற காட்சிகளாக படமாக்கியுள்ளார்.
இதைப்பற்றி இயக்குனர் அலி அபாஸ் கூறும் பொழுது,
படத்தை பெரிய அளவில் உருவாக்குவதற்காக, நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக பயணம் செய்தோம். படத்தின் காட்சிகளுக்கு தேவைக்கேற்ற நிலப்பரப்பினை தேர்வு செய்தோம். ஆஸ்திரேலியாவின் பனிபொழியும் மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம். குதிரை சாவரியில் நடக்கும் கடினமான சண்டை காட்சி மொராக்கோவில் படமாக்கப்பட்டது, அந்நாட்டு நிலப்பரப்பின் அமைப்பு படத்தின் காட்சிக்கு தேவையான விஷூவல்ஸை தந்தது. ஹாலிவுட் படங்களான ட்ராய் மற்றும் மம்மி ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட டிரெய்ண்ட் குதிரைகளும் கிடைத்தன. ‘ஸ்வாஹ் சே கரேங்கே சப்கா ஸ்வாகத்’ என்ற பாடலுக்கு கிரீஸ் நாட்டின் எழில்மிகு இடங்கள் பொருத்தமாயிருந்தது. அபுதாபி ஒரு பாலைவன நிலப்பரப்பை கொடுத்தது. அபுதாபி அரசு எங்களுக்கு பெரும் ஆதரவை கொடுத்தது, புரொடக்ஷ்ன், இராணுவம் மற்றும் விமானப்படை போன்ற உதவிகள் அபுதாபி அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு கிடைத்தது. டில்லியில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் இரண்டுக் காட்சிகளை படமாக்கினோம். ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தனித்துவமும், முக்கியத்துவமும் உள்ளது மற்றும் கதையின் திருப்புமுனையும் அதில் அடங்கியுள்ளது.
2017 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆக்ஷ்ன் அதிரடி படமான டைகர் ஜிந்தா ஹே படத்தை உலகத்தரத்தில் உருவாக்க பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில் பணிபுரிந்த குழுவினருடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளோம். அதிரடி சண்டைக் காட்சிகளுடன் திரில்லான அனுபவத்தை கொண்ட, சல்மான் கான் நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே வரும் டிசம்பர் 22-ல் வெளியாகிறது.