மருத்துவ சட்டங்கள் தொடர்பான கல்வி, தகவல் மற்றும் சேவைகளை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கும் இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிசின் அண்ட் லா நிறுவனம் சார்பாக அக்டோபர் 20ம் தேதி அன்று சென்னையில் 2019ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் சட்டம் தொடர்பான நான்காவது தேசிய மாநாடு நடைபெற்றது. நீதிபதி (முனைவர்) B.C. குப்தா அவர்கள் தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான மருத்துவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து மருத்துவர் T.N. ரவிசங்கர் கூறுகையில்,
மருத்துவ துறையில் பணியாற்றுபவர்களை பாதிக்கும் வகையில் உள்ள மிகமுக்கிய சட்ட சிக்கல்களை தீர்ப்பதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது ஒரே நேரத்தில் பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பதைத் தவிர்ப்பதற்காக மருத்துவ தீர்ப்பாயத்தை அமைப்பது, தற்போது கடுமையாக உள்ள முன் கருத்தரித்தல் மற்றும் பிறப்பு சார்ந்த ஆய்வுகள் (PCPDNT) குறித்த சட்டங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கான உணர்திறன் சோதனைகளை ரத்து செய்தல் போன்ற மிகமுக்கிய அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இத்தகைய சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். மருத்துவ துறையினர் எதிர்கொள்ளும் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நீதித்துறையினர் ஆகியோர் இணைந்து செயல்படுவதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது.
மேலும் மருத்துவர் T.N. ரவிசங்கர் கூறுகையில்,
மருத்துவ தீர்ப்பாயம்:
சமீபத்தில் புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியது. மருத்துவ சேவை வழங்குபவர்கள் இந்த புதிய சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது ஒரே நேரத்தில், மருத்துவ கவுன்சில், நுகர்வோர் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரே நோயாளியினால் வழக்கு தொடுக்கப்படுகிறது. ஒரே வகையான வழக்குகளின் பெருக்கத்தினால் மருத்துவர்களின் சேவை பாதிக்கப்படுவது மட்டுமின்றி இந்த கால தாமதத்தால் நோயாளிகளுக்கும் எந்த பயனும் இல்லை. மருத்துவம் ஒரு சவால் மிகுந்த துறை மட்டுமின்றி நீதிமன்றங்களுக்கு வழக்கு சார்ந்த நுணுக்கங்களை அறிந்துகொள்ள துறை வல்லுநர்களின் உதவியும் தேவைப்படுகிறது. எனவே மருத்துவ தீர்ப்பாயங்கள் ஒரு மாற்றாக செயல்பட முடியுமா என ஆராய்வதே தற்போதைய காலத்தின் தேவையாகும். இத்தகைய மருத்துவ தீர்ப்பாயம் மூலம் மருத்துவ அலட்சியம் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும், மருத்துவம் மற்றும் சட்ட விவகாரங்களின் நிபுணர்கள் கொண்ட மன்றம் மூலம் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கும் நிலை உருவாகும்.
சோனோகிராபியுடன் ஆதார் இணைத்தல் – பெண் சிசு கொலைகளுக்கு ஒரு வழக்கத்திற்க்கு மாறான தீர்வு:
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் PCPNDT சட்டத்தை விரும்பவில்லை. இந்த சட்டம் நீண்ட நடைமுறைகளை கடைபிடிக்கத் தவறியதற்கும், விரிவான பதிவுகளைப் பராமரிக்காததற்கும் குற்றவியல் வழக்குகளை விதிக்கிறது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய கடுமையான சட்டத்தைக் கொண்டிருந்த பிறகும், நாம் இன்னும் விரும்பிய முடிவுகளைக் காணவில்லை. இத்தகைய சூழலில் திருச்சியைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கே. நரசிம்ம ராவ், ஆதார் உடன் ஒரு புதுமையான தீர்வை முன்மொழிகிறார். இத்தகைய தீர்வுகள் தெளிவான, உறுதியான மற்றும் அனைவராலும் ஏற்ககூடிய வகையில் இருப்பது மட்டுமின்றி மருத்துவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும், மாற்றாக இருக்கக்கூடும்.
ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கான உணர்திறன் சோதனை:
ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு முன் எப்போதும் நோயாளிகளுக்கு உணர்திறன் அளவு வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில், மருத்துவ விஞ்ஞானம் ‘பென்சிலியம்’ தவிர, மற்ற ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு உணர்திறன் அளவு வழங்கப்படுவது பயனற்றது என்று உணர்ந்துள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உணர்திறன் அளவைக் கொடுத்த போதிலும், நோயாளி தாமதமாக ஹைப்பர் சென்சிடிவிட்டி எதிர்வினையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்டிபயாடிக் வழங்குவதற்கு முன் உணர்திறன் அளவைக் கொடுக்கும் நடைமுறை உலகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் நுகர்வோர் நீதிமன்றங்கள் இந்த சமீபத்திய வளர்ச்சியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மருத்துவ அறிவியலும் சட்டமும் இயற்கையில் சக்தி வாய்ந்தவையாகும். இவை இரண்டும் புதிய வடிவங்களில் புதிய சவால்களை கொண்டு வரக்கூடியவையாகும். இந்த வருடாந்திர நிகழ்வு மூலம் இத்தகைய பிரச்சினைகள் குறித்து விவாதித்து, ஆராய்ந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு நடைமுறை தீர்வுகள் பரிந்துரைக்கப்படும் என்று கூறினார்.