கோவில்பட்டி அருகே கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் கைது

கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றும்படி வருவாய்துறைக்கு சமீபத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுபிறப்பித்து இருந்தது. இதனை தொடர்ந்து கோவில்பட்டி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் தலைமையில் வருவாய்துறையினர் இன்று ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புக்களை அகற்றினர்;;.அப்போது கோவில்பட்டி – சங்கரன்கோவில் சாலையில் உள்ள வண்ணாவூரணி குளத்தினை ஆக்கிரமித்து அப்பகுதியை சேர்ந்தவர்களால் கட்டப்பட்டு வரும் மாடசாமி கோவிலையும் வருவாய்துறையினர் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்; . இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 24பெண்கள் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமணமண்டபத்தில் வைத்துள்ளனர். மேலும் போலீசார் பாதுகாப்புவுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.