3BHK விமர்சனம்

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், யோகிபாபு, சாய்த்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் 3BHK.

சரத்குமாரும் தேவயானியின் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். அவர்களின் மகனாக சித்தார்த்தம் மகளாக மீதா ரகுநாத்தும் இருக்கிறார்கள்.

சரத்குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார் தனக்கு வரும் மாத வருவாய் வைத்து சென்னையில் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறார்கள். 

அவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. அதற்காக தான் சிறிது சிறிதாக சேமித்து வைத்த பணத்தை வைத்துக்கொண்டு வீடு பார்க்க ஆரம்பிக்கிறார்கள். 

இந்த சமயத்தில் பிளஸ் டூ படிக்கும் சித்தார்த் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கல்லூரியில் சேர்வதற்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளதால் வீடு வாங்க சேமித்து வைத்த பணம் முழுவதையும் கல்லூரிக்கு கட்டி விடுகிறார்கள். இதனால் அவர்களின் வீடு வாங்கும் ஆசை நிராசை ஆகிறது. 

மீண்டும் பணம் சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் பணம் சேர்த்த பிறகு வீடு வாங்கலாம் என்று நினைக்கும் பொழுது வேறு  மகளான மீதாவின் திருமணத்தை நடத்துவதற்கு சூழல் உருவாகிறது. இதனால் சரத்குமாரால் வீடு வாங்க முடியாமல் போகிறது. தன்னுடைய கனவை தன் மகன் சித்தார்த் நிறைவேற்றுவான் என்று நம்புகிறார் சரத்குமார்.

தன் அப்பாவின் ஆசையான வீடு வாங்கும் கனவை மகன் சித்தார்த் நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே  3BHK படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : ஸ்ரீ கணேஷ்

ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன் B & ஜித்தின் 

இசை : சாம் சி எஸ்

தயாரிப்பு : சாந்தி டாக்கீஸ்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர் (D’one)