சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தில் 28வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், பல்கலைகழக தலைவர் மரிய ஜான்சன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய தொழில்நுட்ப கழக தலைவர் சகஷ்ரபுதே, பூமி அறிவியல் அமைச்சகமத்தின் செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சிறந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் செயலாளர் உமாமகேஸ்வரன், பத்மஸ்ரீ அருணண், இயக்குனர் ,சிறப்பு திட்டங்களின் இயக்குநரகம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்.உன்னிகிருஷ்ணன் நாயர், இயக்குனர், மனித விண்வெளி விமான திட்டம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பூமி அறிவியல் அமைச்சகமத்தின் செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சிறந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் செயலாளர் உமாமகேஸ்வரன், பத்மஸ்ரீ அருணண், இயக்குனர், சிறப்பு திட்டங்களின் இயக்குநரகம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன், உன்னிகிருஷ்ணன் நாயர், இயக்குனர், மனித விண்வெளி விமான திட்டம் ஆகியோருக்கு பல்கலைகழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 2544 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 401 மாணவர்களுக்கு முதுகலை பட்டமும், 84 மாணவர்களுக்கு பல் மருத்துவ பட்டமும், 112 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டம் என 3029 நபர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்களை வழங்கினர்.
மேலும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய 20 மாணவர்களுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய தொழில்நுட்ப கழக தலைவர் சகஷ்ராபுதே செய்தியாளர்களை சந்திக்கும்போது:- தேசிய அளவில் இன்ஜினியரிங் நுழைவு தேர்வு வைக்க வேண்டும் என முடிவு செய்து மாநில அரசுகளிடம் முடிவு கேட்டுள்ளோம். சில மாநிலங்கள் தயராக இல்லை எனவும் பாடத்திட்டம் மாறியுள்ள நிலையில் திடீரென நுழைவு தேர்வு வைத்தால் மாணவர்கள் மிகவும் கடிணப்படுவார்கள், பொது தேர்வு நடத்த மாநிலங்களுக்கு கால அவகாசம் தேவைப்படும் இது கஷ்டமான விஷியம் அல்ல சாத்தியமானதுதான் என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஒரே பாடதிட்டம் வைத்தால் பொறியியலில் நுழைவு தேர்வு வைப்பதில் சிக்கல் இருக்காது அதற்கான ஆலோசனைகள் நடபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற நுழைவு தேர்வு மாணவர்களுக்கு சாதகமாக அமையும். பொறியியலில் நுழைவு தேர்வு வைத்தால் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு பயணுள்ளதாக இருக்கும்.
ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் நுழைவு தேர்வில் வெற்றிபெற்றால் மாணவர் சேர்க்கை சுலபமாக கிடைக்கும் என அகில இந்திய தொழில்நுட்ப கழக தலைவர் சகஷ்ரபுதே பேட்டியளித்தார்.
இவ்விழாவில் மாணவர்கள், அவரது பெற்றோர்கள், உறவினர்கள் என சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர்.
சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தின் 28வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அகில இந்திய தொழில்நுட்ப கழக தலைவர் சகஷ்ரபுதே, சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், பல்கலைகழக தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.