தமிழ் இருக்கை நன்கொடையாக ₹25 இலட்சம் வழங்கிய எம்.வி. முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் “தமிழ் இருக்கை” நிறுவுவதற்கான செயல்பாடுகளின் ஒரு பகுதியாக,வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் அவர்கள் “தமிழ் இருக்கை நன்கொடையாக” ₹25 இலட்சத்திற்கான காசோலையை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களிடம் வழங்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்திரு. ஆறுமுகம் உடன் இருந்தார்.