2018 திரைப்பட விமர்சனம்

இந்திய ராணுவத்தில் வேலை செய்ய பயந்து சொந்த ஊருக்கு வந்து விடுகிறார் அனூப் (டொவினோ தாமஸ்) அவருக்குள் இருக்கும் பயத்தை ஊர்மக்கள் கேலி செய்கின்றனர். அந்த பயத்தை கடந்து போகும் தருணத்திற்காக காத்துட்டு இருக்கார். அதே சமயத்துல வாழ்க்கை துணையையும் தேடுறாரு. அந்த சமயத்துல அருகில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வந்து சேர்கிறார் மஞ்சு (தன்வி ராம்) மக்களுக்கு உதவுவதுதான் மஞ்சுக்கு பிடித்தமான விஷயமாக இருக்குது தானே முன்வந்து மற்றவர்களுக்கு உதவுவது அனுப்போட இயல்பு அப்படின்றதால இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் உண்டாகி காதல் ஏற்படுகிறது.

மாத்தச்சன் (லால்) இவரின் மகன்களாக நரேனும் டிக்சனும். டிக்சனுக்ககு (ஆசிப் அலி) மாடல் ஆவதுதான் லட்சியமா இருக்கு. ஆனா தான் ஒரு மீனவ குடும்பத்தை சார்ந்தவன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுறாரு. அதை காரணம் காட்டியே அவர் காதலிக்கும் பெண் வீட்டிலும் மறுக்கின்றனர்

அதேபோல வானிலை மையத்தில் வேலை செய்கிறார் ஷாஜி (குஞ்சாக்கோ போபன்) இவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் புதிதாக வீடு கட்டி இருக்கிறார்.

போலந்து நாட்டில் இருந்து கேரளாவிற்கு ஒரு தம்பதி சுற்றுலா வருகிறார்கள். அவர்களுக்கு சுற்றுலா தளங்களை சுற்றிக் காட்டும் வேலையை கார் ஓட்டுனரான கோஷிக்கு கிடைக்கிறது. இவர்கள் சுற்றிப் பார்க்க போகும் இடங்கள் எல்லாம் வெள்ளத்தின் காரணமாக மூடப்பட்டிருக்கிறது.

திருமணமான தன் மனைவியை விட்டு சென்று துபாயில் வேலை செய்து வருகிறார் ரமேசன் (வினித் சீனிவாசன்) அவர்களுக்குள் பிரச்சனை இருப்பதால் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு வர தயங்குகிறார். ஊரில் இருக்கும் அவரது அம்மா திடீரென கீழே விழுந்து காயம் ஏற்பட அவசரமாக கேரளாவுக்கு திரும்பி வர நினைக்கிறார் ஆனால் அவருக்கு கோயம்புத்தூருக்கு தான் விமான டிக்கெட் கிடைக்கிறது.

மதுரையை சேர்ந்த சேதுபதி (கலையரசன்) லாரி ஓட்டுனராக இருக்கிறார். தன்னுடைய மகள் மற்றும் அம்மாவை விட்டு கேரளாவிற்கு சரக்கு எடுத்து செல்லும் வேலையை செய்து வருகிறார்.
ஒரு நாள் கேரளாவில் இருக்கும் ஒரு ஆலையை வெடி மருந்து வைத்து தகர்க்க செல்லுமாறு கூறுகிறார் முதலாளி விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொண்டு கேரளாவுக்கு செல்கிறார். போலீசிடமிருந்து தப்பிப்பதற்காக வெள்ள நிவாரண பொருட்களையும் லாரியில் ஏற்றி சொல்கிறார்.

இப்படி வெவ்வேறு வழியில் செல்லும் பல மனிதர்களின் வாழ்க்கை ஒரே நாள் இரவில் ஏற்படும் வெள்ளத்தால் வெள்ளப் பெருக்கால் மாறுகிறது. இவர்கள் அனைவரும் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள் அந்த பிரச்சனையில் இருந்து வெளி வந்தார்களா? என்பது தான் 2018 படத்தோட மீதி கதை.