2017 ஆம் ஆண்டின் சிறந்த “மா மனிதன்” விருது வழங்கும் விழா

எடிட்டர் லெனின், ஆசிரியர் பகவான் இருவருக்கும் 2017 தமிழகத்தின் மா மனிதன் விருது! தாணு வழங்கினார்.

தமிழ் இலக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை சாலிகிராமத்தில்
காமராஜர்சாலையில் ஜெய்கோபால் கரோடியா ஸ்கூல் அருகில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் 2017 ஆம் ஆண்டின் சிறந்த “மா மனிதன்” விருது வழங்கும் விழா நடைபெற்றது

திருவள்ளூர் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் தங்கள் ஆசிரியரை பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு செல்ல கூடாது என பாசப்போராட்டம் நடத்திய ஆசிரியர் பகவான் அவர்களுக்கும்

திரைப்பட எடிட்டர், நடிகர், இயக்குனர் எளிமையை வலிமையாக கொண்டு தயாரிப்பாளர்களின் உற்ற தோழனாகவும் இருக்கும் பி. லெனின் இருவருக்கும் “2017 ஆம் ஆண்டின் சிறந்த மா மனிதன்” விருதினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன், வணிசங்க பேரவையின் மாநில பொதுச் செயலாளர் தேவராஜ், தமிழ் இலக்க திரைப்பட குறும்பட ஆவணபட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி சேகரன்ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.

விழாவுக்கு வந்தவர்களை மக்கள் தொடர்பாளர்கள் விஜயமுரளி, கிளாமர் சத்யா, வெங்கட், கணேஷ்குமார், ஆறுமுகம் ஆகியோர் வரவேற்றனர்.