இன்றைய செய்திகள்

வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனை சென்னை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் திருப்பத்தூரில் அமைச்சர் வீரமணியை சந்தித்து மனு அளித்தார்.

உடனடியாக அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். தமிழக சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் – சென்னையில் ஆளுநரை சந்தித்தப்பின் திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் பேட்டி.

எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் வலியுறுத்தினோம் .ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் – திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

அதிமுகவின் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு தினகரனுக்கு அழைப்பு இல்லை. வரும் 21ஆம் தேதி இப்தார் நோன்பு நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.

ஜெயலலிதாவின் ரத்த உறவான தனக்குத்தான் போயஸ்தோட்டத்து வீடும், ஹைதராபாத் திராட்சைத் தோட்டமும் சொந்தம் என்றும், இதற்காக சட்டரீதியாக போராடப்போவதாகவும் தீபா கூறியுள்ளார்.

சித்தூர் அருகே கொசஸ்தலை கிளை ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் இடத்தை நாளை பார்வையிடுகிறார் முக.ஸ்டாலின்.

கருணாநிதி , ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழகத்தை ஆளும் திறன் கொண்டவர் முக.ஸ்டாலின் தான் -திமுக எம்பி. கனிமொழி.

ஈரோட்டில் பள்ளி வாகனம் மோதி 4 வயது சிறுமி பலி.

மேகாலயாவில் பெரும் நிலச்சரிவு – 3 பேர் பலி 2 பேரை காணவில்லை.

2015-16ஆம் ஆண்டில் நூறு நாள் வேலை திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதாக மதுரைக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு.

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல்குண்டு வீசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் , திமுக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தஞ்சை செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் மனிதசங்கிலி போராட்டம்.

பெங்களூருவில் சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவையை பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார்.

வேளாங்கண்ணியில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

திருவண்ணாமலை – ஜவ்வாது மலையில் 20வது கோடை விழாவை அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.ஜவ்வாது மலையில் கண்காட்சி அரங்குகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.

137 ஆண்டுகளில் இல்லாத அளவு 2-வது முறையாக கடந்த மே மாதத்தில் அதிக வெப்பம் நிலவியதாக நாசா தெரிவித்துள்ளது.

பத்திரிக்கையாளர்களுக்குபல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிக்க உள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

2018 பிப் 6ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பிற்கும், பிப் 19 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறை தேர்வுகள் நடைபெறும் பள்ளிக்கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் அறிவிப்பு.