ரெயில்வே நிர்வாகம் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு ? மத்திய வருவாய்த்துறை தீவிர விசாரணை

railwayதட்கல் டிக்கெட், முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து, ரெயில் பெட்டிகளில் வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக் காக பயணிகளிடம் ரெயில்வே இலாகா வரி விதிக்கிறது.எனினும் இந்த வருமானத்தை மத்திய அரசுக்கு செலுத்துவதில் வரி ஏய்ப்பு நடந்து இருக்கலாம் என்று மத்திய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதில் ரூ.300 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.இதுபற்றி, மத்திய வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-ரெயில்வேயின் 16 மண்டலங்களும் தட்கல் டிக்கெட், முன் பதிவு செய்த டிக்கெட் ரத்து, படுக்கை விரிப்புகள் வழங்குதல் போன்றவற்றுக் கான சேவை வரி விதிப்பு தொடர்பாக தங்களது பொறுப்பை சரிவர நிறைவேற்றவில்லை என்பது எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.சேவை வரியின் கீழ் பெறப்பட்ட வருமானத்துக்கும், அதற்காக செலுத்திய வரித்தொகைக்கும் இடையே ரூ.300 கோடி வித்தியாசம் காணப்படுகிறது. இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகிறோம். வரி ஏய்ப்பு நடந்ததா? என்பதை கண்டறிய மேற்கண்ட சேவைகளின் வருமானம் குறித்து விவரங்களையும் ரெயில்வே இலாகாவிடம் கேட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.தங்கள் இலாகா மீது கூறப்படும் குற்றச்சாட்டை ரெயில்வே அமைச்சக அதிகாரிகள் மறுத்தனர்.