முதலமைச்சர் பன்னீர்செல்வம் துணிச்சலான முடிவு

தமிழகத்தில் குழப்பம் உச்சபட்ச நிலையில் உள்ளது என தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். குழப்பமான நிலையில் ஆளுனரால் எந்த முடிவும் எடுக்கமுயாது என தமிழிசை கூறியுள்ளார். அதிமுக குழப்பத்தில் இருப்பதை ஆளுநர் கவனித்து வருவதாக தமிழிசை கூறினார்தங்கள் கட்சியில் உள்ள குழப்பத்தை மறைக்க வேறு கட்சி மீது சசிகலா குற்றம் சுமத்துகிறார். ஜெயலலிதா மரணத்தில் மருத்துவரான தனக்கே குழப்பம் உள்ளதாகவும் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் குழப்பத்தை நிவர்த்தி செய்யவேண்டியது அரசின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் பன்னீர்செல்வம் துணிச்சலான முடிவு எடுத்து இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.