அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களை தொகுதிக்கு சென்று சந்திக்க முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா, சென்னை கிழக்கு மாவட்டம் இளைஞரணி சார்பில் ஏழுகிணறு பகுதியில் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான தயாநிதி மாறன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே மக்களை சென்று சந்திக்க கூடிய நிலை இருப்பதாக தெரிவித்தார். 40 எம்.பி-க்கள் திமுக-விற்கு இருந்த போது தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக தயாநிதி மாறன் கூறினார்.
ஆனால் அதிமுகவிற்கு 50 எம்.பி-க்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை என குறிப்பிட்டார். ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வந்த போது அதிமுகவினரே அதனை பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.