காசிமேட்டில் போலீசார் விரட்டியதால் கடலில் விழுந்ததாக கூறப்படும் மீனவரின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
போலீசார் விரட்டியதால் கடலில் தவறி விழுந்ததாக கூறப்படும் மீனவரின் பெயர் தமிழரசன். நேற்றிரவு நண்பர்களுடன், கடல் அரிப்பை தடுக்க போடப்படிருக்கும் சுவற்றின் மீது அமர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசாரை பார்த்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓட்டம் பிடித்தனர். அதைக் கண்ட போலீசார் விரட்டியபோது தப்பியோட முயன்ற தமிழரசன் நிலைதடுமாறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து காசிமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.