கோவில்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், பெட்ரோல் டீசலை ஜீ.எஸ்.டிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவிகளை கைது செய்வதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்ட்; கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கட்சியின் தாலூகா செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன் கண்டன உரையாற்றினர். இதில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஞானசேகர், ஓட்டபிடாரம் ஒன்றிய செயலாளர் அழகு, கோவில்பட்டி நகர செயலாளர் சரோஜா, செந்தில் ஆறுமுகம், அலாவூதீன், செல்லையா,ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.