பா.ம.க. தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துள்ளதாக அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வரும் 20-ந்தேதி முதல் அடுத்தக்கட்ட பிரச்சாரத்தை துவங்க இருக்கிறோம். கடந்த ஓராண்டாக மக்களிடம் நேரடியாக நாங்கள் சென்றிருக்கிறோம். அதுவும் ஒருவகையில் பிரச்சாரம் தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் வித்தியாசமான பிரச்சாரங்களை நாங்கள் முன்வைத்துள்ளோம். அதுமட்டுமல்ல, எங்களது தேர்தல் அறிக்கை வித்தியாசமான தேர்தல் அறிக்கை. கடந்த செப்டம்பர் மாதம் வரைவு தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். அதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். மக்களிடம் எங்களது தேர்தல் அறிக்கை முழுமையாக சென்றடைந்திருக்கிறது. இப்பொழுது தி.மு.க எங்களது தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பிடித்துள்ளது.’ என தெரிவித்தார்.