பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ரஞ்சன்பூர் மாவட்டத்தில் ஒரு தீவு பகுதியில் ‘கோட்டு’ தீவிரவாத அமைப்பினர் கைப்பற்றி அதை மறைவிடமாக பயன்படுத்தி வந்தனர். அதை அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ராணுவம், போலீஸ் என 1,600 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.அதை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் 13 பேர் பலியாகினர். அவர்களில் 7 பேர் போலீஸ்காரர்கள். அவர்களில் பெரும் பாலானவர்கள் அதிரடிப் படை கமாண்டர்கள் ஆவர். இவர்கள் தவிர 22 பேரை ‘கோட்டு’ தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்தனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.