நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது எங்கள் கையில் இல்லை, – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ

கோவில்பட்டியில் உள்ள இலக்குமிலை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கிராம சுயாட்சி இயக்கம் தூய்மை பாரத நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ் தலைமை வகித்தார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு தூய்மைபணி மற்றும் கலைக்குழு விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கோலப்போட்டி, கைகள் சுத்தம் செய்யும் முறைகள் நிகழ்ச்சிகள் பங்கேற்ற பின்பு மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு சுழல் நிதி மற்றும், மகளிருக்கான மானிய விலையிலான இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில்

பேராசிரியை நிர்மலாதேவி ஆடியோ வெளியானவுடன் 24மணி நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆளுநர் இது குறித்து துணைவேந்தர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார், உயர்கல்வி துறை அமைச்சரும் துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார், போராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார். தவறு யார் செய்து இருந்தாலும், அரசு ஒரு போதும் மன்னிக்காது, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்று தரும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மாவட்ட மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, ஆய்வு செய்து இன்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆலையின் உரிமத்தினை ரத்து செய்துள்ளது, ஆலையை நிரந்தரமாக மூடுவது எங்கள் கையில் இல்லை, பசுமை தீர்ப்பாயம் மத்தியரசு கட்டுபாட்டில் உள்ளது. ஆலை நிர்வாகம் பசுமை தீர்ப்பாயம், உச்சநீதிமன்றத்தில் ஆணை வாங்கியுள்ளார்கள், அந்த வழிமுறைகளை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கும், உரிமம் ரத்து செய்துள்ளது ஏமாற்று வேலை என்று வைகோ கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு, எல்லாம் தெரிந்து கொண்டே அரசியலுக்காக பேசுகிறார்.பொறுப்புள்ள தலைவர்கள் மக்களை துண்டிவிடாக்கூடாது, அச்சத்தினை ஏற்படத்தவோ, பீதி கிளப்பவோ கூடாது என்பது வேண்டுகோள், போராடும் மக்களை நான் சந்திக்க தயாராக உள்ளேன்., மக்கள் பாதிக்கின்ற விசயத்தில் அரசு வேடிக்கை பார்க்காது, படிப்படியாக தான் செய்ய முடியும்.

ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் வாங்கி கொண்டு அதிமுக தன்னை கூட்டணியில் வெளியேற்றியதாக வைகோ தெரிவித்து குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு இந்த கருத்தினை அன்று ஏன் வைகோ சொல்லவில்லை, அன்று சொல்லி இருந்தால் அது நியாயம், தற்போது கூறுவது ஒரு தலைவருக்கு ஏற்புடையது அல்ல, ஒரு தலைவருக்கு ஏற்புடைய குணத்துடன் அவரிடம் இல்லை, அவருக்கு ஏதோ ஒன்று ஆகிவிட்டது, அவர் மனநிலையை சரி செய்து கொண்டால் நல்லது, வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளது, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சினிமாத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர், நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.